பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 நட்புறுதி யுண்டாகுமாறு பாடுபட்டு வந்தவருமாகி, ஸர் ஜான் ஸ்டவர்நிட் என்பவர் வெனிஜிலாஸ்-க்கு அனுதாபத் தந்தியனுப்பியது காரணமாக அந்த ஸ்தாளுகி பதியை இப்போதுள்ள கிரேக்க கவர்ன்மெண்டார் உத்யோகத்தை விட்டு நீக்கியதாயும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெனிஜிலாஸ் மந்திரியைப் போலவே ருஷியாண் நேசக்ககதிக்கு வாலாக்கிவிட முயற்சி செய்த கெரன்ஸ்தி என்ற ருஷிய மந்திரியை மித்திரன் நேயர்கள் மறந்திருக்க மாட்டார்களென்று நம்புகிறேன். ஒரு கால த் தி ல், கெரன்ஸ்கியை ருஷியா தேசத்து நெப்போலியன் என்று சில ஆங்கிலேயப் பத்திராபதிபர் முதலியோர் சொல்லு வந்தனர். இன்று அந்தக் கெரன்ஸ்கியின் பெயரைே உலகத்தார் மறந்துவிடக் கூடிய நிலைமை வந்துவிட்டது மிஸ்டர் வெனிஜிலாஸ், மிஸ்டர் கெரன்ஸ்கி இவ்விருவரி ஸ்வதேசா பிமானப் பரிசு யாருக்குக் கொடுக்கலாமென்று யோசித்தால் அந்த யோசனை பில் ஒரு முடிவுக்கு வருதல் ஸ்ாத்தியமில்லை யென்றே தோன்றுகிறது. பாரதியாரும் அரசியலும் மேலே மாதிரிக்கு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது இதைப்போல நையாண்டியும், கிண்டல்களும், கேலிகளும் வஞ்சப்புகழ்ச்சிகளும் நிறைந்த பல அரசியல் கட்டுரைகள் ரலைத்திரட்டு, குறிப்புகள், வினோதத்திரட்டு, வினேத கொத்து, வினேதவிஷயங்கள், உலக வினே தங்கள், உல: நிலை, காலவிளக்கு, மணித்திரள், தீப்பொறிகள், காலச் கண்ணுடி, ஐர்லாந்தும் இந்தியாவும்-என்று இவ்வாறு பலப்பல தலைப்புகளில் வெளியிட்டுள்ளார். மறைமுகமாக பிரிட்டிஷ் ஆட்சியைத் தாக்க வேண்டும் அதன்மேல் வெறுப்பு உண்டாகி விடுதலைக்கு வழிகோல வேண்டு என்பதே இக்கட்டுரைகளின் நோக்கமாகும்.