10
பாரதியார் கதைகள்
சகல மனிதர்களிடத்திலும், ஈசன் ஞானம் என்பதோர் தெய்வீக ரதத்தைக் கொடுத்திருக்கின்றார். அது விரும்பிய திசைகளுக்கெல்லாம் போய் விரும்பிய காட்சிகளை யெல்லாம் பார்த்து வரக்கூடிய வல்லமை உடையது; அதைப் பயன் படுத்தி இன்பமடையாமல் எந்த நிமிஷத்திலும் உன்னைக் கீழே தள்ளித் தீங்கு செய்யக்கூடியதாகிய இழிய மர வண்டியிலே ஏன் விருப்பம் கொள்கிறாய்?” என்றது. உடனே ஞானமாகிய ரதந்தைக் கொண்டு தயார் செய்து வைக்கும்படி எனது சேவகனாகிய ”சங்கற்ப”னிடம் கட்டளை யிட்டேன். ரதம் வந்து நின்றது. அதில் ஏறிக்கொண்டேன். ஆனால் எனது ஞானரதம் மற்றவர்களுடையதைப்போல் அத்தனை தீவிரம் உடையதன்று. எளிதாக நெடுத்துரங் கொண்டு போகத் தக்கதும் அன்று, கொஞ்சம் நொண்டி. என்ன செய்யலாம்? இருப்பதை வைத்துக்கொண்டு தானே காரியங் கழிக்கவேண்டும்? ஆகவே, அந்த ரதத்தின் மீது ஏறிக் கொண்டேன். அதிலேறி நான் கண்டு வந்த காட்சிகளும் அவற்றின் அற்புதங்களுமே இந்தப் புஸ்தகத்தில் எழுதப் படுகின்றன.
உபசாந்திலோகம்
கவலையற்ற பூமி
எனது ஞானத் தேரை நோக்கி “இந்த க்ஷணமே என்னை, துக்கமில்லாத பூமி எங்கேனும் உளதாயின், அங்கு கொண்டு போ” என்று ஏவினேன். ஆகா! இந்த ரதத்தை வைத்துக் கொண்டிருந்தும், இத்தனை நாள் எனக்குக் கவலையும், மன உளைச்சலும் இல்லாதிருக்க வழி தெரியாமல் போய்விட்டதே! எத்தனை நாள் நனது மனம் தூண்டிற் புழுவைப் போலத் துடித்துக் கொண்டிருக்க, அதை நிவிருத்தி செய்வதற்கு யாதொரு உபாயமும் அறியாமல் பரிதபித்திருக்கின்றேன். அம்மம்மா! இந்த உலகத்துக் கவலைகளை நினைக்கும்போதே நெஞ்சம் பகீரென்கிறது. அவற்றுக்குள்ள விஷ சக்தியை