உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானரதம்

77

ஒரு செய்தி மட்டும் நான் அறிவேன். அதர்மம் எப்போதும் நமது முன்னே நிற்கின்றது. எதன் பொருட்டு நிற்கின்றது? உன் கையால் கொலையுண்டு சாகும் பொருட்டாக. அது என்ன சொல்லுகிறது? ‘அப்பா, உன் கையிலேயுள்ள கோடரியை என் தலையிலே அடித்து என் தலையை இரண்டு கூறாகப் பிளந்து விடு‘ என்று சொல்லுகிறது.

“அதர்மங்கள் ரக்த பீஜ முடையவை, கொல்லக் கொல்ல மேன்மேலும் பிறந்துகொண்டே யிருக்கும். க்ஷத்திரியனுடைய கடமை யாதென்றால் அவற்றைத் தன் உயிருள்ளவரை வெட்டித் தள்ளிக்கொண்டே யிருக்க வேண்டும். நாள்தோறும் சூர்யன் இருளைச் சுற்றிச் சுற்றித் துரத்திக் கொலை செய்துகொண்டு வருகிறான். சூரியனே முதலாவது க்ஷத்திரியன். எங்கள் குலத்துக்குப் பிதாமகன்.

”அதர்ம நாசத்திற்காகப் போர் செய்துகொண்டே யிருப்பதுதான் க்ஷத்திரிய தருமமென்று சொன்னேன். அத்தொழிலுக்கு உரிய பயிற்சியும் சாதனங்களும் கைக் கொள்ளுதல் அவசியமென்று கூறுதல் மிகையாம்” என்று முடித்தான்.

நித்தியமாக இருக்கும் அதர்மங்களை நாம் அடிக்கடி கொல்வதில்தான் என்ன பிரயோஜனம் என்றெண்ணித் திகைக்கலானேன். அந்தக் கேள்வியை சத்தியராமனிடம் கேட்டதற்கு அவன் சிறிதேனும் மயங்குதலின்றிப் பின் வருமாறு உத்தர மளித்தான்.

”தமோகுணம் கேட்கின்ற கேள்வி! மித்திரா, கர்மம் (தொழில்) செய்யாமல் மனிதன் அரை க்ஷணமேனும் இருக்க முடியாது. நீ விரும்பினாலும், லிரும்பாவிட்டாலும் தொழில் செய்துகொண்டே யிருக்கவேண்டும் என்பது விதி. அந்தக் கர்மத்தைக் கடலலைப்பட்ட துரும்புபோலச் செய்யாமல், சூர்யனை போலச் செய்வது பெருமையல்லவா? சாதாரண சரீர சுகங்களைப்பற்றிய காரியங்களிலே கூட மனிதன்