உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நவதந்திரக் கதைகள்

85

திரும்பவும் அவனைக் கூப்பிட்டான். சிறுவன் திரும்பி வந்தான்.

“ஐயரே! நீர் முந்திச் சித்திரை வீதியில் முருகச் செட்டியார் கடையில் இருக்கவில்லையா?“ என்று செட்டி. கேட்டான்.

மானி— “ஆம்“ என்றான்.

செட்டி— “அங்கிருந்து ஏன் வெளியேறி விட்டீர்?“

மானி— “எனக்கும் முருகச் செட்டியாருக்கும் குணம் ஒத்து வரவில்லை”

செட்டி— “அதென்ன விஷயம் காணும்?“

மானி— “நம்முடைய குணம் அவருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய குணம் எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான்.“

செட்டி, “அதுதான் என்ன விஷயம்?“ என்று கேட்டேன்.

மானி— “அதை இவ்விடத்தில் விளங்கச் சொல்வதில் பிரயோஜனம் இல்லை.“

செட்டி— “ஏன்? குற்றம் உம்முடையதுதானோ?“

மானி— “என்மேல் ஒரு குற்றமும் இல்லை. ஒருநாள் என்னைக் கடையில் வைத்துவிட்டு வெளியே போனார். அவருடைய மகனும் அன்று கடைக்கு வரவில்லை. கடையில் என்னைத் தவிர வேறு யாருமே கிடையாது. இப்படியிருக்கையில், சங்குத் தேவன் என்ற மறவன் வந்து, “செட்டியார் எங்கள் வீட்டிலே யிருக்கிறார். ஐந்து துலாம் சர்க்கரை வாங்கிக்கொண்டு வரச்சொன்னார். அவருடைய சொந்தச் செலவுக்கு வேண்டுமாம். தனது பற்றென்று எழுதச் சொன்னார்“ என்றான். அந்தச் சங்குத்தேவன் அந்தச் செட்டியாருடன், உயிருக்குயிரான சிநேகம் என்பதும்