பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் அமுதாயக்கருத்துக்குள்-ஆ சீனிவாசன் 119

வரிக் கொடுமைகளைப் பற்றியும் ஜப்திக் கொடுமைகளைப் பற்றியும் எழுதுகிறார். ஆட்சியின் கொடுமைகள் அளவுக்கு மீறிப் போகும் போது அந்த அன்னிய ஆட்சிக்கு எதிரான நமது கோபமும் அளவுக்கு மீறிப் போகிறது.

“ஒரு கொள்கையாவது, பகுத்தறிவின் துணையால், செய்யத் தக்கது இது செய்யத் தகாதது இது என்று ஒருவன் அறிந்து முன்பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனத்தால் ஒப்புக் கொள்ளும் கருமத் தொடரின் அஸ்திவாரமாகிய ஒரு கருத்தாம். நம் நாட்டில் இவ்வாறு கொள்கைகளைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் கொள்கைகளை அவரோடு மனத்தால் கிரகித்தல் வேறு. அவற்றின் படி நடத்தல் வேறு. யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் ஆங்கீகரித்துக் கொண்டு அதன்படி நடக்க முடியாதவனாக இருந்தால் அவனும் ஜீவப்பிரேதம் தான்” என்று கொள்கை பற்றி பாரதி அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இன்னும், “தான் குடிக்கும் காப்பிக்காகவும், தான் தின்னும் சோற்றிற்காகவும் தான் உடுக்கும் ஆடைக்காகவும் ஒருவன் தன்னுடைய அருமையான கொள்கைகளைக் கை விடுவானானால் அவனை மானிடரில் எந்த வகுப்பில் நாம் சேர்க்கலாம்? அவனினும் பதரான மனிதன் ஒருவனும் இருக்க முடியாது. அவன் சம்மந்தப் பட்ட மட்டில் கொள்கைக்கும், செய்கைக்கும் வெகு துரம் உண்டு” என்று பாரதி குறிப்பிடுகிறார்.

அடுத்து சுதந்திர உணர்வின் வேகத்தோடும், அதற்கான கொள்கை பற்றி எடுத்துக் கூறி பாரதி பேசுகிறார்.

பாரத தேசத்தோராகிய நாம் சகலவிதமான சுதந்திரங் -களையும் இழந்து எங்கேயோ இருந்து வந்த ஒரு வெள்ளை நிற