பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. @ëgëzofkir f'puu 124

16.இந்துக்களின் சிறப்பு:

“அட்டுற யார் மாட்டும் நில்லாது

செல்வம் சகடக்கால் போல வரும்.”

என்று நாலடியார் பாடல் குறிப்பிடுகிறது என்று அதை சுட்டிக் காட்டி பாரதியார் மேலும் கூறுகிறார்.

லகூலிமிதேவி எந்த இடத்திலும் ஒரே நிலையாக நிற்பது வழக்கமில்லை. செல்வமும் அதனால் உண்டான பெருமையும் ஒரு கூட்டத்தாருக்கிடையே குறைவு படும்போது உட்பொறாமையும் மாற்சரியமும் வெளிப்பட்டு அவை தலை தூக்கி ஆடுகின்றன. உலக சரித்திரத்தை அறிவுடன் படித்த புத்திமான்கள் இதனை நன்றாக அறிவார்கள்.

ஆனால் இவ்விஷயத்தில் கூட மற்ற தேசத்தாரைக் காட்டிலும் ஹிந்துக்கள் மேல் என்று எனது விசாரணையில் தென் படுகிறது. ஏனென்றால் ஹிந்துக்களிடம் தெய்வ பக்தி என்ற சிறந்த குணம் மற்றெல்லா தேசத்தாரைக் காட்டிலும் அதிகம் என்பதை மேற்குப் பக்கத்துப் பண்டிதரிலே கூடப் பகூடிாபாதமற்ற பல யோக்கியர் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். தெய்வ பக்தியால் ஜீவதயை உண்டாகிறது.

“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”

என்று தாயுமானவர் நமது தெய்வ பக்தியின் உண்மையை விளக்கினார்.

பாரதி மேலும் கூறுகிறார்.

“சென்ற கார்த்திகை மாதம், புயற் காற்றடித்தது பற்றி தென்னாற்காடு