பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TLLLLS LLLLLLL LL LLLLL LLLLLL LLLLLLLLLSK LLLLLS SS L0L

மாட்டாது. ஆயின் (அவனது) தேஹம் பிராமணன் எனில் அதுவுமன்று. சண்டாளன் வரையுள்ள எல்லா மனிதர்களுக்கும் பஞ்ச பூதங்களால் ஆக்கப் பட்ட உடலும் ஒரே அமைப்புடையதாகத் தானியிருக்கிறது. மூப்பு, மரணம், இயல்பு, இயலின்மைகள் - இவையனைத்தும் எல்லா உடல்களிலும் சமமாகக் காணப்படுகின்றன. மேலும் பிராமணன் வெள்ளை நிறைமுடையவன். கூடித்திரியன் செந்நிறமுடையவன், வைசியன் மஞ்சள் நிறமுடையவன், சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்தையும் காணவில்லை. இன்னும் உடல் பார்ப்பானாயின், தகப்பன் முதலியவர்களை இறந்தபின் கொளுத்தும் மகன் முதலியவர்களுக்குப் பிரமஹத்தி தோஷம் உண்டாகும். ஆதலால் (அவனுடைய) தேஹம் பிராமணனாக மாட்டாது. ஆயின் பிறப்புப் பற்றி பிராமணன் என்று கொள்வோமென்றால் அதுவுமன்று. மனிதப் பிறவியற்ற ஐந்துக்களிடமிருந்து கூட ரிஷிகள் பிறந்ததாகக் கதைகளுண்டு. ரிஷிய சிருங்கர்மானிலிருந்தும் ஜாம்பூநகர் நரியில் இருந்தும், வால் மீகர் புற்றிலிருந்தும், கெளதமர் முயல் முதுகிலிருந்தும் பிறந்ததாகக் கதை கேட்கிறோம். அது போக வசிஷ்டர் ஊர்வசி வயிற்றில் பிறந்தவர். வியாசர் மீன் வலைச்சி வயிற்றில் பிறந்தவர். அகஸ்தியர் கலசத்திலே பிறந்ததாகச் சொல்லுவார்கள். முன்னாளில் ஞானத்திலே பெருமையடைந்தவர்களாகிய பல ரிஷிகளின் பிறவி வகை தெரியாமலேயே இருக்கிறது. ஆகையால் பிராமணத்வம் பிறப்பு பற்றியதன்று ஆயின் அறிவினால் பிராமணன் எனக்கொள்வோ மென்றால் அதுவுமன்று. கூடித்திரியர் முதலிய மற்றவர்ணத்தவர்களிற் கூட அநேகர் உண்மை தெரிந்த அறிவாளியாயிருக்கிறார்கள். ஆதலால் அறிவு பற்றி ஒருவன் பிராமணன் ஆக மாட்டான். ஆயின் செய்கை பற்றி ஒருவன் பிராமணனாகக் கொள்வோமெனில் அதுவுமன்று. பிராப்தம், சஞ்சிதம், ஆகாமி என்ற மூவகைச் செயல்களும் ஒரேவிதமான இயற்கையுடையனவாகவே காணப்படுகின்றன. முன் செயல்களால் துண்டப்பட்டு ஜனங்கள்