பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LLLLLL L L0LS LLS TCCLy LLLCL LLLLLLLTT LLLSK TMTTS 000

நம்பிக்கை, உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ளத்தகும்” என்று பாரதி கூறுகிறார்.

"எவனும் உடம்பை உழைப்பினாலும், அசைவினாலும், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதை உத்ஸாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிர முண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்து கொண்டால் மனது உற்சாகத்துடன் இருக்கும். மனத்தளர்ச்சிக்கு இடம் கொடுக்கலாகாது. கவலை மனிதனை அரித்துக் கொன்று விடும். பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.

மன உறுதி, சந்தோஷம், உலகை நடத்தும் சக்தி நமக்கு நன்மை செய்யும் என்ற நம்பிக்கை, சரீர உழைப்பு, முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை வழக்கப் படுத்த வேண்டும்.

'உடம்பிலே நோயில்லாமல் வலிமையுடன் இங்கே நூறாண்டு வாழலாம்” என்று பாரதி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஒரு நாட்டின் பலம் அந்த நாட்டின் உடல் பலத்தில் உடல் ஆரோக்கியத்தில் இருக்கிறது என்பதை பாரதி தனது கட்டுரையில் வலியுறுத்திக் கூறுகிறார். நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமும் பலமும் இருந்தால் நல்ல உழைப்பு வளரும், செல்வம் பெருகும், கல்வியும் அறிவும் ஒளி வீசும். மற்ற நாடுகளிலிருந்து மரியாதை கிடைக்கும். அந்த இடத்திற்கு எனது நாடு உயர வேண்டும் என்பதுவே பாரதியின் சிந்தனை.

செல்வம் என்னும் தலைப்பில் பாரதி எழுதுகிறார்.

முற்காலத்திலே இந்தியா செல்வத்துக்கும், கல்விக்கும்,

ஞானத்துக்கும், தியானத்துக்கும், பக்திக்கும், வீரத்துக்கும், பராக்கிரமத்துக்கும், சாஸ்திரங்களுக்கும், பல விதமான