பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியரைப் பற்றிட – ––– - --- -- 252

தீர்வு காண்பதில் இந்திய மக்களிடையில் நூறாண்டு காலத்திய ஆங்கிலக் கல்வி மூலம் ஏற்பட்ட மேலைநாட்டு சிந்தனைப் போக்குகளும், இந்திய பாரம்பரியத்தின் தொடர்ச்சியான இந்திய சிந்தனைப் போக்குகளும் எழுந்து அவை மோதியிருக்கின்றன. இன்னும் அது தொடர்கிறது.

திரு. அ. சீனிவாசன் தன்னுடைய ஐம்பது ஆண்டு காலத்திற்கு மேலான பொது வாழ்க்கை, பத்திரிகைப் பணிகள், தொழிற்சங்க இயக்கப் பணிகள், விவசாயிகளின் போராட்ட அனுபவங்கள் ஐந்தாண்டு திட்டங்களின் வளர்ச்சிப் போக்குகள் பற்றிய படிப்பு, இந்திய நாட்டின் அரசியல் வளர்ச்சி ஆகியவற்றின் அனுபவத்தில் தான் அதுவரை பணியாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சித்தாந்த சிந்தனை, அரசியல் கொள்கைகள் அவைகளின் செயல்பாடு, அமைப்பு நிலைப்பணிகள், அணுகும் முறை ஆகிய பல பிரச்னைகளிலும் தனக்குச் சொந்தமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அக்கட்சியிலிருந்து விலகி 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைமையின் கீழ் சமுதாயப் பணி ஆற்றிவருகிறார். ஒரே நாடு பத்திரிகை, மற்றும் விஜய பாரதம் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியும் எழுதியும் வருகிறார்.

அத்துடன் சொந்தமாகவும், பாரதி, கம்பன், சிலப்பதிகாரம், திவ்யப் பிரபந்தம் தொடர்பான பல நூல்களும் எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டும் வருகிறார். அதன்படி பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி, பாரதியின் புதிய ஆத்திசூடி, ஒரு விளக்கவுரை, சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துகள், ஆகிய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்