பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் espple opgrušogo.gifteen-e. சீனிவாசன் 43

“கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாக உணர்ந்தும், தீமையை உதரித்தள்ள வலிமையின்றித் தவிக்கிறது. இதற்கு என்ன நிவாரணம் செய்வோம். "தைரியம் தான் மருந்து.”

தைரியம், துணிவு, வைராக்கியம், விடாமுயற்சி, அஞ்சாமை, இவ்வாறு பல நற்குணங்கள் நம்மை ஊக்குவிக்க வேண்டும்.

தாற்காலிக அசெளகரியங்களையும், கஷ்டங்களையும், பொருட் படுத்தாமல் மனிதர், தாம் உண்மையென்று கண்டதை நடத்தித் தீர்த்து விட வேண்டும். அங்ங்ணம் தைரியத்துடன் உண்மை நெறிப்பற்றி நடப்போரை மற்றவர், புகழ்ச்சியாலும், சம்மானங்களாலும் ஊக்கப் படுத்த வேண்டும். கலி போதும், வீண் துன்பங்களும், அநாவசியக் கஷ்டங்களும் பட்டுப்பட்டு உலகம் அலுத்துப் போய் விட்டது” என்று நியாய மற்றவைகளை எதிர்த்து நிற்பதற்கு மக்கள் அனைவரையும் ஒன்று சேரும்படி பாரதி அரை கூவி அழைக்கிறார்.

“வாருங்கள், மக்களே! வாருங்கள். அண்ணன் தம்பி மார்களே, அக்கா, தங்கை மார்களே! வாருங்கள். ஒருவரிருவர் நேர் வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள் உலகத்திரே! கூட்டம் கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்” என்று பாரதி கூறுகிறார்.

"ஆண் பெண் சமத்துவமே தர்மம் என்று தெரிகிறதா? அப்படியானால் வாருங்கள் மாதர்களை லகஷக்கணக்காக விடுதலை செய்வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததா? நிறவேற்றுமைகளும், தேச வேற்றுமைகளும் உபயோகம் இல்லாதன என்று தெரிகிறதா? நல்லது வாருங்கள் கோடிக்கணக்காக சமத்துவ நெறியில் பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை லக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம்.