பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத தேவியின் சம்பூரணரூபம் 38 நாவினில் வேதமுடையவளாக கைகளில் நலம் திகழ் வாளுடையவளாக, தன்னை மேவினவர்களுக்கு இன்னருள் புரிபவளாக, தீயரை ஒழித்திடும் தோளுடையவளாகக் காணப்படுகிறாள். * கோடி கோடி தடக்கைகளால் அறங்கள் நடத்துபவளாகவும், தன்னை எதிர்த்து வருபவர்களைத் துளாக்குபவளாகவும் காணப்படுகிறாள். பூமியைக் காட்டிலும் பொறுமை உடையவளாகவும், பெரும் புண்ணிய நெஞ்சுடையவளாகவும் இருக்கிறாள். எனினும் தீங்கிழைப்பவர் முன்பாகக் கொடும் துர்க்கையாகவும் காட்சியளிக்கிறாள். கற்றைச் சடை மதி, வைத்த துறவியைத் தொழுதும், கையில் ஒற்றைத் திகிரி கொண்டு ஏழுலகும் ஆளும் ஒருவனைத் தொழுதும் நிற்கும் காளியின் காட்சியும் தென்படுகிறது. பாரத அன்னை, யோகத்திலே நிகறற்றவள். உண்மையும் ஒன்றென நன்று அறிவாள். உயர் போகத்திலேயும் நிறைந்தவள். எண்ணரும் பொற்குவை தானுடையாள். அந்த சக்தி மிக்க துர்க்கையும் முழுமையாகத் தென்படுகிறாள். நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிபவள், அவர் அல்லவராயின் அவரை விழுங்கி ஆனந்தக் கூத்திடும் அற்புதச் செயல் நிறைந்த அன்புத்தாயும் தென்பட்டாள். வெண்மை நிறைந்த பனிமால் இமயம் பெற்றெடுத்தவளான பாரதத்தாய் அவருடைய சீரிய திவ்ய ரூபம் காணப்படுகிறது. பாரதத்தாயைப் பேரொளியாக பாரதி காண்கிறார். வேதங்கள் பாடி, உண்மை வேல் கையில் பற்றிக் குதித்து, ஒதரும் சாத்திரம் கோடி உணர்ந்து ஒதி உலகெங்கும் விதைக்கும் பாரதப் பேரொளியாக பாரதத்தாய் காட்சியளிக்கிறாள்.