பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

குணத்திலும் சீலத்திலும், சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று நிலத்தின் தன்மை பயிர்களுக்கு உளதாகும் என்னும் எடுத்துக்காட்டுடன் பாரதி சுடடிக் காட்டுகிறார்.

'நூலைப் போல் சேலை, தாயைப் போல் பிள்ளை' என்று நாட்டுப் பழமொழி இங்கு கவனிக்கத்தக்கது. நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்டு புதுமைப் பெண்கள் இருக்க வேண்டும் என்பது பாரதியின் வாக்காகும்.

வேதகாலத்தில் பெண்களுக்கு சமநிலை இருந்தது. பின்னர் மாற்றப்பட்டு கேடு விளைந்தது என்பது பாரதியின் கருத்து.

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள் தன்னிலே பொதுவான வழக்கமாம்,

முதுமைக்காலத்தில் வேதங்கள் பேசிய முறமை மாறிடக் கேடு விளைந்ததாம்’

என்பது பாரதியின் கவிதையாகும்.

பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் சூதாட்டத்தில் பொன்னையும் பொருளையும் நாட்டையும் தன்னையும் தம்பியரையும் கடைசியில் பாஞ்சாலியையும் இழந்த பின்னர் பாஞ்சாலி சபைக்கு இழுத்து வரப்படுகிறாள். அப்போது பாஞ்சாலி சபையிலிருந்த பெரியோர்களைப் பார்த்து நீதி கேட்கிறாள். அப்போது வீட்டுமன் கூறுகிறார்.

'சூதாடி நின்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான் வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய் சூதிலே வல்லான் சகுனி, தொழில் வலியால் மாதரசே, நின்னுடைய மன்னவனை வீழ்த்தி விட்டான் மற்றிதனில் உன்னையொரு பந்தையமா வைத்ததே