பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் புதிய ஆத்திசூடி O

நூலாசிரியரைப் பற்றி...

நூலாசிரியர் அ.சீனிவாசன், இன்றைய விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்துர் வட்டம் மகாராஜபுரம் கிராமத்தில் 1925 ஆம் ஆண்டில் பிறந்தார்.

அவர் சாத்துர், வத்ராப், விருதுநகர் ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்பையும், மதுரையில் கல்லூரிப் படிப்பும் முடித்து, இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்திய விமானப்படையில் செய்தித் தொடர்புப் பொறியளராகப் பயிற்சி பெற்று பணியாற்றியவர்.

அவர் சிறு வயதிலேயே தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், பொதுவுடமை இயக்கங்களில் தனது சொந்த மாவட்டத்தில் தொடர்பு கொண்டு அரசியல் மற்றும் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

1947ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியப் பொதுவுடமை, இயக்கத்திலும், தொழிலாளர் - விவசாயிகள் இயக்கங்களிலும், தன்னை முழுநேரமும் ஈடுபடுத்திக் கொண்டவர். இராஜபாளையம், தளவாய்புரம், திருவில்லிபுத்தூர், வத்ராப், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக் கோட்டை ஆகிய நகரங்களிலும் சென்னையில் துறைமுகம், ஆவடி டாங்கி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம் முதலிய இடங்களிலும் தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றி தொழிலாளர் இயக்க அனுபவம் கொண்டவர்.

--- அவர் இராஜபாளையம் நகரசபை உறுப்பினராகவும், சென்னை கப்பல் கூடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.

அவர் ஜனசக்தி வார இதழ், நாளிதழ்களிலும், மார்க்சிய ஒளி என்னும் தத்துவ மாத இதழ் ஆகிய இதழ்களில் தலைமை ஆசிரியராக முறையே பன்னிரண்டு ஆண்டுகளும் இருபது ஆண்டுகளும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.