பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பாரதியின் புதிய ஆத்திசூடி O

எனவே தலைநிமிர்ந்து நடப்பது மனித இயல்பாக வளர்ந்து வருகிறது. அப்படியிருந்தும் இன்னும் சிலர் கூனிக்குறுகிக் குனிந்து நடப்பது அடிமைத்தனமாகும, இந்திய மக்களில் பலர் அன்று கூனிக்குறுகிக் குனிந்து நடப்பதை பாரதி வெறுத்தான், அதனால்தான் பாரதி ஏறுபோல் நட என்று கூறுகிறான், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை வேண்டும் என்று கூறுகிறார்.

நாம் நடக்கும் போது மார்பு விசாலமடைகிறது. தோள்கள் திரளுகின்றன. உடல் வலிமையடைகிறது. உறுதிப்படுகிறது. நாம் நிமிர்ந்து நடக்கும் போது நமது பார்வை நேராகவும் சுற்றுமுற்றும் செல்கிறது. அப்போது அதிகமான உலகக் காட்சிகளை நாம் காண்கிறோம். அதனால் நமக்கு பார்வை அறிவு அதிகரிக்கிறது. பொது அறிவு விரிவடைகிறது. நெடிது நோக்குடன் நெடுந்துாரம் செல்கிறது.

நாம் நிமிர்ந்து நடப்பதன் மூலம் உடல் உறுதி பெறுகிறது. உள்ளம் விசாலமடைகிறது. அறிவு வளர்ச்சியடைகிறது.

அடிமைத்தனம் போகிறது.

ராணுவத்தில் கவாத்து சொல்லிக் கொடுக்கிறார்கள். அப்போது தலைநிமிர்ந்து நெஞ்சை உயர்த்தி, கைகளை வீசி நடக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதனால் ஒரு கம்பீரம் ஏற்படுகிறது. உடல் வனப்பு அதிகமாகிறது.

நமது இளைஞர்கள் அனைவருக்கும், பள்ளிக்குழந்தைகள் அனைவருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாயமாக கவாத்து பயிற்சி கொடுக்க வேண்டு. அதன்மூலம் வீரநடை ஏற்படும். ஒரு ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்படும். அதனால் தான் பாரதி ஏறுபோல் நட என்று கூறியுள்ளார்.

9. ஐம்பொறி ஆட்சி கொள்

ஐம்பொறிகள் என்பது மெய் (உடம்பு) வாய், கண், மூக்கு.

செவி ஆகிய ஐந்துமாகும். இந்த ஐந்து பொறிகள் மூலமே நாம் உலகை அறிகிறோம். உடம்பால் சுற்றிச்சூழலில் உள்ள தட்பவெப்ப