பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 * பாரதியும் பாரதிதாசனும் இதனால் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரே, பிறர்க்கென வாழும் பெருமனம் படை த்தோரே சமுதாயத்திற் பெரியவராக எண்ணத்தக்கவர் என்ற பாரதியின் கோட்பாடு நன்கு புலனாகின்றது. காலத்திற்கேற்ப மக்கள் புதிய புதிய தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என்ற பாரதியின் கொள்கை பாராட்டப்பட வேண்டுவதாகும். ஆயுதம் செய்வோம் கல்லகாகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் ஒயுதல் செய்வோம் தல்ை சாயுதல் செய்வோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் - -பாரதியார் ; பாரததேசம், 9 என்றும், ஞாலம் கடுங்கவரும் கப்பல்கள் செய்வோம். -பாரதியார் ; பாரததேசம், 10 : 4 என்றும், உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம் -பாரதியார் : பாரததேசம், 12 : 4 என்றும் பாரதியார் பாடியிருப்பது மக்கள் புதிய புதிய துறைகளில் நுழைந்து முன்னேறவேண்டும் என்று அவரி கொண்ட துடிப்பை உணர்த்துகின்றது. எனவேதான். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதைத் தொழுது பணிந்திடடி பாப்பா என்றும்,