பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 - பாரதியும் பாரதிதாசனும் நண்பகற் கடலைக் கண்டோம்; நிலாக்காலக் கடலை காணவேண்டாமா? இரவில் தன் பொன்னுடை களைந்து புதிதான முத்துச்சேலை அணிந்து, த ட ங் க ட ற் பெண்ணாள் எழில்நிலா ஒளி கொட்டும் வேளையில் வெள்ளிய நிறங்கொண்டு துலங்குகின்றாள். "கடலே! நீ நிலைபெற்று வாழ்ளாயாக!” என்று வாழ்த்துக் கூறடா தம்பி!” என்று கூறிக் கடல் பற்றிய பகுதியை முடிக்கிறார் பாரதிதாசன். தென்றல் தமிழர் இயற்கையின் இனிய பெற்றியை நுகர்ந்த வர்கள். வடக்கேயிருந்து வரும் காற்றை வாடை" என்றும், தெற்கேயிருந்து வீசும் காற்றைத் தென்றல்' என்றும், மேற்கேயிருந்து வரும் காற்றைக் கோடை" என்றும் கிழக்கே இருந்து வரும் காற்றை கொண்டல்' என்றும் பழந்தமிழர் குறிப்பிட்டனர். இவ ற் றி ல் தென்றல்' என்னும் தென்திசைக் காற்றை விருப்புடன் வரவேற்றனர். வாடை என்னும் வடக்குக் காற்று உடலுக்கு ஊறு செய்யும் என வெறுத்தனர். இனித் தென்றலைப் பாரதிதாசனார் பாட்டிசைக்கும் வாங்கு தனைக் காண்போம்! பலகோடி அண்டங்களையும் த ன் ன க த் .ே த கொண்டுள்ள ஒரு பெரும்புறத்தில் காற்று கூத்திடு கின்றது. ஒரு வலிமையான குன்றத்தை வன்காற்று துாள் தூளாக்கும். அதே நேரத்தில் மெல்லிய அணிச்ச மலரினுள்ளும் நோகாது மென்காற்று நுழைந்து செல்லும். இவ்வாறு காற்று வன்மையும் மென்மையும் பெற்றுத் திகழ்வதனைக் கவிஞர் பாரதி தாசன் பின்வருமாறு அழகுறப் புலப்படுத்துகின்றாள் : -