பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5А. сит. 20. I இரண்டாம் பகுதி "விருந்தோம்பல் ஆகும். தமிழ்ப் பண்பாட்டில், தலையாய இடம்பெறுவது விருந்தோம்பல் ஆகும். திருவள்ளுவரின் விருந்து அதிகாரம் இதனை யுணர்த்தும். சங்க நூலாம் நற்றினையும், அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள் என்று நட்டநடு இரவிலும் விழுந்து நோக்கி நிற்கும் தலைவி யைப் புலப்படுத்தி நிற்கும். விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே என்ற குறுந்தொகைத் தொடரும் விருந்தின் மேன்மை விளக்கும். தொல்காப்பியனார் கிழவோள் மாண்புகள் என்று குறிப்பிட்டிருப்பதில் 'விருந்து போற்றுதல்’ என்ற ஒன்றும் அடங்கும். கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறங் தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் -தொல்; பொருளதிகாரம்; கற்பியல் : 11 இத்தகு சிறப்பு வாய்ந்த விருந்தோம்பலினை இரண் டாம் பகுதியாக வைத்துள்ளார் புரட்சுக் கவிஞர் பாரதி தாசன். * , "முதற் பகுதியின் நிகழ்ச்சிக்கும், இந்நிகழ்ச்சிக்கும். இடையில் எவ்வளவு நாள் சென்றிருக்குமோ எனில் ஏறக் குறைய இரண்டாண்டுகள் என்க. இப்பகுதியில் வீட்டில் முதியோர் தள்ளாமை அடைந்துள்ளனர். குடும்பத் தலைவர்களுக்குத் தம் பிள்ளையின் காதல் உள்ளம் புலனாகிறது" என்று கவிஞர் கருத்துரைக்கின்றார்.