பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ram. of எல் லையொன் றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்புகான் தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று பாரதியார் பாடியுள்ளதிலிருந்து இளங்கோ, வள்ளுவர், கம்பர் ஆகிய மூன்று பெரும் புலவர்களும் தமிழினத்தின் அமரத் தன்மைக்கு அடித்தளம் அமைத்த வர்கள் என்று அவர் கருதினார் என்பது தெரிகிறது. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று உறுதி கொண்டிருந்தார் பாரதியார். "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்று வள்ளுவப் பெருந்தகையிடத்துத் தாம்கொண்ட ஆராத அன்பினை துலங்கும் மதிப்பினைப் புலப்படுத்தினார் பாரதியார். செங்கோல் தவறிக் கொடுங்கோன்மை மிகுகின்ற போது அந்நாட்டில் நீதி குலைந்து நேர்மையற்ற செயல் களே நிகழ்ந்துகொண்டிருக்கும் என்பது திருவள்ளுவர் பெருமானின் கருத்தாகும். கூழும் குடியும் ஒருங்கிழக்கும்; கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு (குறள் :554) இதனாலேயே பாரதியாரும் உருசியப் பெருநாட்டிற் கொடுங்கோலோச்சிய ஜாரி மன்னனின் வீழ்ச்சியிணை, இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் ஜார்.அரசன் என்று பாடினார். பாஞ்சாலி சபதத்தில் துரியோதனனின் கொடுங்கோன்மை காரணமாகப் பாஞ்சாலி கண்ணிர்விட