பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. an’. 39 பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின் (குறள் , 54) என்றும், சிை ற காக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை . குறள் : 5.) என்றும் திருவள்ளுவர் குப்பிட்டார். பெண்கள் பின்னாளில் பெருமை குன்றிப் போனதற்கு அவர் களுக்குக் கல்வியறிவு வழங்கப்படாதது ஒரு காரண மாகும். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்ற இழிவுமொழி எழுந்தது இடைக்காலத்தில்தான். "தொட்டிலையாட்டும் கையே தொல்லுலகை ஆளும் கை' என்பர். அவவகையில் கல்வி கற்ற பெண்களைப் பின்வருமாறு புலப்படுத்துகின்றார் பாரதியார் ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணிஇருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். கல்வி கற்ற புதும்ைப்பெண்ணை நமக்குக் காட்டு கிறார் பாரதியார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் கடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைகாண் என்று கும்மியடி. இம்மட்டோடு பாரதியார் நிற்கவில்லை. ஆண் சமுதாயம் பெண் சமுதாயத்தை-சரிபாதி சமுதாயததை ஒதுக்கினால் அது கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம்