பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா. ゲ炭 'aாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்ற பாடலிலும் அப்பெருமித உணர்வு சுடர்விம்டு ஒளி விடுவதைக் காணலாம். - 6. பாரத நாட்டின் ஒருமைப்பாடு புன்னாகவராளி இராகத்தில் அமைந்துள்ள பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் என்று தொடங்கும் பாடல் மனப்பாடஞ் செய்யவேண்டிய பாடல் எனலாம். ஏனெனில், இப் பாடலில்தான் பாரத நாட்டின் ஒருமைப் பாடு மிகச் சிறப்பாகக் கிளத்தப்படுகின்றது. சான்றாகச் சில அடிகள் : வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் மேலைக்கடல் முழுதுங் கப்பல் விடுவோம் பள்ளித்தல மனைத்துங் கோயில் செய்குவோம். சிங்களத் தீவினுக் கோர்பால மமைப்போம். சிந்து கதியின் மிசை நிலவினிலே சேர கன் னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துப் தோணிக ளோட்டிவிளை யாடி வருவோம். ஒயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம். சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்... 7. பெருமித ஊற்று பூபாள இராகத்தில் அமைந்துள்ள மன்னு மிமய மலை யெங்கள் மலையே' என்று தொடங்கும் பாடலும் பெருமிதத்தின் ஊற்றாயமைந்திருக்கக் காணலாம். இப் பாடலில்தான் பாரதியார்,