பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fl.com. 79 11. புதிய பாரதம் எனவே, பாரதி புதிய பாரதத்தைக் கற்பனைக் கண் கொண்டு காண்கிறார். வலிமையற்ற, பொலிவற்ற, பொறியிழந்த, ஒளியிழந்த, கிலிபிடித்த பாரதம் போய் ஒளி படைத்த, உறுதிகொண்ட பாரதம் உருவாவதனை மனக்கண்முன் கொண்டுவந்து காண்கிறார் பாரதியார். "பாரத சமுதாயம் வாழ்கவே என்னும் பாடல் மிகவும் முக்கியமான பாடலாகும். இப்பாடலில், கணியும் கிழங்குந் தானியங்களும் கணக்கின்றித் தரும் நம்நாட்டில் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இருப்பதைக் காட்டி. இனியொரு விதி செய்வோம்-அதை எந்த நாளும் காப்போம் தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை யழித்திடுவோம் என்று வீர முழக்கமிடுகின்றார். எல்லாரு மோர்குலம் எல்லாரு மோரினம் எல்லாரு மிந்திய மக்கள் எல்லாரு மோர்நிறை எல்லாரு மோர்விலை எல்லாரும் இக்காட்டு மன்னர் என்று முத்தாய்ப்பு வைக்கிறார். 12. தமிழ்நாடு பாரதநாட்டுப் பற்று பரக்கக் கொண்டிருந்த பாரதியார் தாம்பிறந்த தமிழ்நாட்டினை மறந்தவரல்லர். செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து