பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே செய்தல் வேண்டும், தேவ தேவா! ஞான காசத்து நடுவே நின்று நான் 'பூமண்ட லத்தில் அன்பும் பொறையும் விளங்குக: துன்பமும், மிடிமையும், நோவும், 10 சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனை நீ திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி, அங்ங்னே யாகுக என்பாய் ஐயனே! இந்நாள் இப்பொழு தெனக்கிவ் வரத்தினை 15 அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த சக்தி குமாரனே! சந்திர மவுலீ! நித்தியப் பொருளே! சரணம் சரணம் சரணம் சரணமிங் குணக்கே. 4. விநாயகர் நான்மணி மாலை விருத்தம் வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே! ஆழ்க உள்ளம் சலனமிலாது! அகண்ட வெளிக்கண் அன்பினையே சூழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க! கலியின் வலியெல்லாம்! கிருத யுகந்தான் மேவுகவே.