பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 உத்தரம் கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடை யாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்? உலகப் புரட்டர் தந்திர உரையெலாம். விலகத் தாய்சொல் விதியினைக் காட்டுவான். மலைவு செய்யாமை, மனப்பகை யின்மை! நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை: தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை; ஆச்சரியப்பட உரைத்தனன்-அவையெலாம். வருக காந்தி ஆசியா வாழ்கவே! தரும விதிதான் தழைத்திட உழைப்பாய். ஆன்மா அதனல் ஜீவனை யாண்டு மேனெறிப் படுத்தும் விதிதனை யருளிய்ை; பாரத நாட்டின் பழம்பெருங் கடவுளர் வீரவான் கொடியை விரித்துநீ நிறுத்திய்ை! மானுடர் தம்மை வருத்திடும் தடைகள் ஆனவை யுருகி அழிந்திடும் வண்ணம் உளத்தினை நீ கனல் உறுத்துவாய்! எங்கள் காந்தி மஹாத்மா! நின்பாற் கண்டனம்! மாந்தருட் காண நாம் விரும்பிய மனிதனை! நின்வாய்ச் சொல்லில், நீதிசேர் அன்னை தன்வாய்ச் சொல்லினைக் கேட்கின்றனம் யாம்; தொழுந்தா யழைப்பிற் கிணங்கி வந்தோம் யாம். எழுந்தோம்; காந்திக் கீந்தோம் எமதுயிர். இங்கவன் ஆவிக் கொள்கை வென்றிடவே, அன்றைக் குணவுதான் அகப்படு மாயின் நன்றதில் மகிழ்வோம்; விடுதலை நாடி எய்திடுஞ் செல்வ எழுச்சியிற் களிப்போம்; மெய்திக ளொற்றுமை மேவுவோம்; உளத்தே