பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 ஓதி ப் பொருளியல் கண்டுதாம் . பிறர் உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே - இன்பம் மோதி விழிக்கும் விழியினர் - பெண்மை மோகத்தில், செல்வத்தில் கீர்த்தியில், 10 'ஆடுதல், பாடுதல், சித்திரம் - கவி யாதி யினைய கலைகளில் - உள்ளம் ஈடுபட் டென்றும் நடப்பவர் . பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர் நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில நாளினில் எய்தப் பெறுகுவார் - அவர் காடு புதரில் வளரினும் - தெய்வக் காவனம் என்றதைப் போற்றலாம். II "ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த ஞானம் விரைவினில் எய்துவாய்' - எனத் தேனி லினிய குரலிலே - கண்ணன் செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை ஈன மனிதக் கனவெலாம் - எங்ங்ன் ஏகி மறைந்தது கண்டிலேன்! - அறி வான தனிச்சுடர் நான் கண்டேன் - அதன் ஆட லுலகென நான் கண்டேன்! 12 41. கண்ணன் என் குழந்தை (குறிப்பு : பாரதியார் எழுதிய கண்ணன் பாட்டு ஒர் அற்புதமான இலக்கியப் படைப்பு. இதைக் கவிஞர் வாயிலாகவே கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஒவ்வொன்றும் மாணிக்கங்களாகக் கருதுவர் என்று வியந்து போற்றி பாராட்டியிருக்கிருர், கம்பராமாயண