பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு; வேதமடி நீ யெனக்கு வித்தையடி. நானுனக்கு: போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே! நாதவடி வானவளே. நல்ல உயிரே கண்ணம்மா! 6 நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு: செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே! முல்லைநிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா, தாரையடி நீ யெனக்கு தண்மதியம் நானுனக்கு; வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு: தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஒருருவ மாய்ச் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா! 8 45. கோமதி மஹிமை! (குறிப்பு : பாரதியார் அரியும் சிவனும் ஒன்றேதான், கொஞ்சமும் ஏற்றத்தாழ்வு இல்லை, வீளுகப் பூசலிட்டுக் கொள்ளாதீர்கள் என்று இக்கவிதையிலே காட்ட முயல் கிருர். இந்தப் பூசல் பிற்காலப் புராணங்களை எண்ணி எழுந்ததாகும். நல்ல வேளையாக காஞ்சிப் பெரியவர் அவர்கள் திருப்பாவை திருவெம்பாவை ஒன்முக நடைபெற வேண்டும் என்று சிறந்ததோர் திட்டம் செய்தார். இதல்ை இப்பூசல் சிறிது மறைந்தது என்று சொல்லலாம். இக் கவிதை முற்றுப்பெருவிடினும் ஒரு உண்மையைக் காட்டுகின்றது என்பதற்காக இதில் சேர்க்கப்படுகிறது. (சங்கர நயினர் கோயில் ஆவுடையம்மையின் புகழ் சிவபிரான் தானும் திருமாலும் ஒரு பொருளென்று உணர்த்தி ஒரு வடிவங் காட்டிய சரித்திரம்.)