பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 அழுக்குத் தீர்க்கும் தொழில் செய்வோர் நமது தேசத்தில் மாகாணத்துக்கு லக்ஷம் பேர் வேண்டும். ஹிந்துக்கள் தற்காலத்தில் குப்பைக்குள் முழுகிப் போய்க் கிடக்கிருர்கள். வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை. ஜலதாரைகளை ஒழுங்கு படுத்தவில்லை. கிணறுகளையும், குளங்களையும், சுனை களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை. கோயிற் குளங்களில் ஜலம் புழுத்து நெளிகிறது. நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. மனுஷ்யாபிவிருத்தி யாவது யாது? புழுதியை நீக்கித் தரையைச் சுத்த மாக்குதல். அழுக்குப் போகத் துணியையும், நாற்ற மில்லாதபடி குளத் தையும், பொதுவாக எல்லா விஷயங்களையும் சுத்தமாக்கி வைத்துக் கொள்ளுதல். நான் மேற்படி சாமியாரிடம், 'சாமியாரே, ஞான நெறியிலே செல்ல விரும்புவோன் முக்கியமாக எதை ஆரம்பத் தொழிலாகக் கொள்ள வேண்டும்?' என்று கேட்டேன். குள்ளச்சாமி சொல்லுகிருர் : 'முதலாவது, நாக்கை வெளுக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது. புறஞ் சொல்லக் கூடாது. முகஸ்துதி கூடாது. தற்புகழ்ச்சி கூடாது. வருந்தச் சொல்லலாகாது. பயந்து பேசக்கூடாது. இதுதான் வண்ணுன் தொழில் ஆரம்பம். பிறகு அந்தக்கரணத்தை வெளுத்தல் சுலபம். சில இடங்களில் பொய் சொல்லித் தீரும்படியாக இருந்தால், அப்போது மெளனத்தைக் கொள்ள வேண்டும். மெளனம் ஸர்வார்த்த ஸாதகம். அதை விட்டுப் பேசும் படி நேர்ந்தால் உண்மையே சொல்ல வேண்டும். உண்மை விரதம் தவறக்கூடாது. தவற வேண்டிய அவசியமில்லை: