கவிதைகளாகவும், வடித்துத் தந்த பாரதி முற்றிலும் அரசியல் கலைஞராக உருமாறிவிட்டார். 16 ஆம்; பாரதி காங்கிரசிலே தீவிரவாதியாகச் செயல்படத் துவங்கிவிட்டார். 1906, 1907, 1908ம் ஆண்டுகளில் "இந்தியா' பத்திரிகையில் பாரதி எண்ணற்ற அரசியல் கட்டுரைகளைத் தீட்டியுள்ளார். காங்கிரஸ் என்று தலைப்பிட்டே பல கட்டுரைகளை எழுதியுள்ளார். காங்கிரஸ் பற்றி பாரதி "காங்கிரஸ் மகாசபை வருஷந்தோறும் கூடிவருவதால் பயன் ஒன்றும் கிடையாது என்று நாம் சொல்லவரவில்லை. ஆனால் அதிலிருந்து நாம் எதிர்பார்த்தபடி அத்தனை பயன் கிடைக்கவில்லையென்பதையும், எவரும் மறுக்கமாட்டார்கள். ராஜாங்க முறைமைகளில் சீர்திருத்த சம்பந்தமாக இதுவரை காங்கிரசிலிருந்து உயர்ந்த நன்மை எதுவும் கைவந்துவிடவில்லை, ஆனால் ஜன ஐக்கிய விஷயத்தில் காங்கிரஸ் பெரும் தூண்டுகோலாக இருக்கிறதென்பதை யாவரால் மறுக்க முடியும்? வருடந்தோறும் நடக்கும் காங்கிரஸ் சபைகளும், அவற்றின் காரியாதிகளைப்பற்றி விஸ்தரிப்பதற்கு வர்த்தமானப்பத்திரிகைகளும், இல்லாவிடின் நம்மவரில் பெரும்பாலாருக்கு ராஜாங்க விஷயங்களில் இப்போதிருக்கும் சொற்பசிரத்தைகூட இல்லாமல் போயிருக்கும்.' காங்கிரஸ் குறித்து தனது கருத்தினை வெளியிட்ட பாரதி கல்கத்தாவில் கூட இருந்த காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் தயாரானார். காங்கிரஸ் பிரதிநிதி பாரதி 11 17 என்று சென்னையில் புதிய கட்சிக்கு ஒரே பிரதிநிதியாய் இருக்கும் நமது தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் மேற்படி சபைக்கு அவசியம் வந்து சேர வேண்டுமென்று ஸ்ரீவிபினசந்திரபாலரும், ஸ்ரீதிலகரின் உயிர் துணையாகிய ஸ்ரீகாபர்தேயும், வற்புறுத்திக்கடிதம் எழுதியபடியால் இப்பத்திராதிபர் அங்கே செல்லுகின்றார் என்று அதுகுறித்து 22.12.1906 இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அது கல்கத்தாவில் காங்கிரஸ் மஹாசபைக்கு டெலிகேட்டுகளாக பின்வரும் கனவான்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. 16.முனைவர் கோ. கேசவன், பாரதியும், அரசியலும் பக் 29. 17.வி.எஸ்.சுப்பிரமணியம், இளசை மணியன், பாரதிதரிசனம், முதல்பாகம், 1986, பக்.5 12
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/13
Appearance