" பாரதியும் காங்கிரசும் பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள் பாரத நாடு ” என்று மார்தட்டிய தேசியக் கவிஞனின் கவிதை வேட்டுக்களைக் கேட்டு " பார்அதிர்ந்தது”; அதனால் தான் என்னவோ "பாரதி" யென்று பெயர் சூட்டி மகிழ்ந்தது. நடுத்தர உயரம், மாநிறம், சுழலும் கண்கள், அகன்ற நெற்றி, அதிலே குங்குமப்பொட்டு, துடிதுடிக்கும் உதடு, ஓயாது பாடும் வாய், கறுத்து அடர்ந்து முறுக்கிவிடப்பட்ட மீசை, தலையிலே சிவப்புத்துணியால் கட்டப்பட்ட பெரிய முண்டாசு, அதிலிருந்து வால்தொங்கும், ஒரு கிழிந்த கோட்டு, கையிலே புத்தகம், இராணுவ வீரன் போன்ற அளந்த நடை இது தான் பாரதியின் தோற்றம். இந்திய தேசியத்தின் விடுதலையில் பங்கு வகித்திட்ட காங்கிரஸ் பேரியக்கத்தில் பாரதிப் புலவனின் பங்குதான் என்ன ? இளமைக்காலம் வீரத்தின் விளைநிலமான நெல்லைச் சீமையில் எட்டயபுரம் ஜமீன்பகுதியில் 11.12.1882இல் சின்னச்சாமி - இலக்குமி அம்மாளின் திருப்புதல்வராகத் தோன்றிய பாரதி " இந்த முளை விதைக்குள்ளேயே வைரம் பாய்ந்து வந்துவிட்டதோ?” கலைமகள் எழுதிய மனிதப்புத்தகமாக இவன்? சுப்பையா! நீ சுப்பையா! நீ பையனல்லன் பையனல்லன் பாரதி! பாரதி!' என்று போற்றப்படுமளவில் இளமையிலேயே சிறந்து விளங்கினார். பருத்திஅறவை ஆலை 1892 பிப்ரவரி 6ஆம் தேதியன்று பாரதியாரின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அறவை ஆலையைத் துவக்கினார். 66 ஏழைகள் மீது இரக்கத்தாலும், நம்மவர் நலங்கருதியும் இவர் எட்டயபுரத்தில் யந்திரமணைச்சாலை யேற்படுத்த முன்னின்று முயன்று முடித்தார். இந்தப் பிரதேசத்தில் பருத்தியந்திரமணைச்சாலை முதலில் ஏற்படுத்தத் துணிந்தவர் இவரே. தற்காலம் எட்டையபுரம் சமஸ்தானாதிபதி யாயிருக்கும் பண்டித அரசருக்கு இவர் ஆப்தநட்பாளர். தணிகரும், 1.கவிஞர் வைரமுத்து, கவிராஜன் கதை, 1987, பக், 18. 5
பக்கம்:பாரதியும் காங்கிரசும் 1998.pdf/6
Appearance