பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii

விதிகளையும் நாட்டு விதிகளையும் மேன்மேலும் புத்திசாலித்தன மாகச் சீர்திருத்திக் கொண்டு வந்தால் மனுஷ்ய ஜாதிக்கு rேம முண்டாகும்” என்றும் கூறுகின்றார்.

பாாதியார் தொழிலாளர் நலன்களையும் மிகப்பரிவுடனும் அனுதாபத்துடனும் நோக்குகிறார். இதைத் தொழிலாளர் என்ற பகுதியிலே காணலாம். அவர் கூறுகின்ற முக்கியமான எண்ணங்களாவன: “தொழிலாளரிடம் பொது ஜனங்களும் முதலாளிகளும், மிகுந்த மதிப்புச் செலுத்தும்படி ஏற்பாடு செய்வதே இந்த வேலையில் முதற்படியாம். தம்முடைய கார்யத்தைச் செய்ய வேண்டியதே தொழிலாளியின் ஆத்மா வுக்கு ஈசனல் விதிக்கப்பட்ட புருஷார்த்தம்’ என்று முதலாளி களில் பலர் நினைக்கிரு.ர்கள். யந்திரங்களைப் போலவே இவர்கள் மனிதரையும் மதிக்கிறார்கள். பொதுவாக ஏழைகளிடம் செல்வருக்கு உள்ள அவமதிப்பு அளவிடும் தரம் அன்று. இவ்விதமான எண்ணம் நம்முடைய தேசத்திலும் செல்வர் களிடத்தும் மிகுதியாக காணப்படுகின்றது. இவ்வெண்ணத்தை உடனே மாற்றித் தொழிலாளிகளையும் மற்ற ஏழைகளையும் நாம் ஸாதாரண மனிதராக நடத்த வேண்டும் என்று தெளி வாகக் கூறுகின்றார்.

இந்த இடத்திலே செல்வர்கள் கடமை என்ன என்பது பற்றி புதிய உயிர் என்ற கட்டுரையிலே (17 மார்ச்சு 1916) மிக அழுத்தமாகக் கூறியுள்ளார். நமது நாட்டுச் செல்வர்கள் இவ்விஷயத்தைக் கவனிக்க வேண்டும். உன் சொத்தை எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, நீ ஏழையாக வேண்டுமென்று நான் சொல்லவில்லை. கைத்தொழில்களும் வியாபாரங்களும் ஏற்படுத்தி அக்கம் பக்கத்தாரிடம் சரியான படி வேலை வாங்கிக்கொண்டு சரியானபடி கூலி கொடு உனக்கும் நல்ல லாபம் கிடைக்கும். கூலி குறையக் கொடுக்கும் முதலாளி லக்ஷ்மி தேவியைக் காலால் உதைக்கிருன். அவன் மகன் தரித்திரத்திலும் நோயிலும் வருந்துவான். ஸகல ஜனங்களுக்கும் வயிறு நிறைய உணவு கிடைக்காத ஊரில் வாழும் செல்வர் ளெல்லாம் திருடர். அங்கே குருக்களெல்லாம் பொய்யர்