பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தமிழ் நாட்டின் விழிப்பு பத்திரிகைகளின் நிலைமை கும்பகர்ணன் துங்கிளுைம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. ராம ராவண யுத்தத்திற்கு ராமராவண யுத்தமே நிகர்' என்று முன்னேர் சொல்லியிருக்கிருர்கள். அப்படிப்பட்ட சண் டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்க்ம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடுமாடு குதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னர்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி ராவணன் கட்டளையிட்டானம்; மேகங்கள் போய் இடித்தனவாம்; கும்பகர்ணன் குறட்டை நிற்கவேயில்லை. மேற்படி கும்பகர்ணனைப்போலே சில தேசங்கள் உண்டு. அண்டங்க்ளத்தனையும் இடிந்து விழுந்தாலும் காதுகேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சிலவுண்டு. அந்த தேசங்களிலே வாஸ்ம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர் துரோகம், சகோதரத் துரோகம், தெய்வத் துரோகம், சுதேசத் துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானிடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிருர்கள். ஆனால், ஹிந்து தேசம் அப்படி...யில்லை! இங்கு தமிழ் நாட்டைப்பற்றி முக்யமாகப் பேச வந்தோம்: தமிழ்நாடு மேற்படி மஹா பாதக ஜாபிதாவைச் சேர்ந்ததன்று, அன்று!