பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ff ஆர்வத்தோடு கற்றுக்கொள்ளவும் செய்கிருர்கள். மெய் தான். ஆனல் இந்த சங்கீதத்தின் பிறப்பிடத்திலேயே போற்றுவார் இல்லாவிட்டால், அந்த ஊற்று வற்றிவிட் டால் யார் இதன் பெருமையை உலகுக்குத் தொடர்ந்து அறிவிப்பது? ஒரு பெரிய சங்கீத வித்வானிடம் விசாரித்தேன். அவருடைய குழந்தைகளில் யாரும் இசையைக் கற்றுக் கொள்ளவில்லையாம். அந்த வித்வான் விதிவிலக்கன்று. இதே கதிதான் பலருடைய வீட்டிலும், நமது சங்கீதம் இனி சோறு போடாது என்று பலரும் நினைக்கிருர்கள். சோறு கிடைப்பது கலையின் வளர்ச் சிக்கு முதல் அடிப்படை. ஆயிரக்கணக்கான ஸ்தபதிகள், சிற்பிகள் பெருகி யிருந்த இந் நாட்டில் அவர்கள் சுருகிப் போய் விட்டார்கள் என்று நாம் அறிவோம். ஏன்? ஆதரிப்பார் இல்லாமை யால். ஆதரிப்பார் இருந்தால் அல்லவோ எந்தக் கலையும் வளரும்? பாரதியார் பூர்விக மஹான்களின் பாடல்களை வெறுப் பவர் அல்ல என்பது அவருடைய கட்டுரைகளே நிதான மாகப் படித்துப் பார்த்தால் தெளிவாக விளங்கும். ஆனல் புதிய பாடல்கள் வேண்டும் என்கிரு.ர். சங்கீதத்தை அதன் அடிப்படைத் தன்மை மாருது பெருகியோடும் ஒரு ஜீவ நதியாக மாற்ற வேண்டும் என்று அவர் ஆசைப்படு கிரு.ர். இல்லாவிட்டால் நமது சங்கீதம் ஒளியிழந்து விடும் என்கிரு.ர். புதிய பாடல்களைக் கையாள்வதற்குப் பல விக்கினங் களைக் கற்பனை செய்து கொண்டிருக்கிருேம். அப்பாடல்கள் பழையதாக வேண்டும். காலம் கடந்து 50 ஆண்டு