பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ጸ25 தியாசையர் தெய்வ வரம் பெற்றவர். தியாகையர் ரஸ்க்கடல். கர்நாடக ஸங்கீதம் இப்போது உயிர் தரித் திருப்பதற்கு அவரே காரணம். பூர்வகாலத்து ஞானிகளைப் போலே, இவர் இஷ்ட தேவதைக்கு ஆத்ம யக்ஞம் செய்து, தான் அற்று, வித்தை வடிவாகி விளங்கினர். இவருடைய பாட்டுக்களே இக் காலத்துப் பாடகர் அதிக ஸங்கதி'களா லும் ரஸநாசத்தாலும், சொற்களைத் திரித்தல், விழுங்கு தல் முதலிய செய்கைகளாலும, இயன்றவரை ஆபாச மாக்கிவிட்ட போதிலும், இன்னும் அவற்றிலே பழைய ஒளி நிற்கத்தான் செய்கிறது, குப்பையிலே கிடந்து மாசேறி ஒளி மங்கிப் போயிருந்த போதிலும், மாணிக்கத் தின் குணம் ரத்னப் பரீகைக்காரனுக்குத் தெரியாதா? அதுபோலவே, ரஸ உண்மை தெரிந்தோர் இத்தனை குழப் பத்துக்கிடையே தியாகையருடைய தொழிலின் ஸ்வ ரூபத்தை நன்கு கண்டு பிடித்துக்கொள்ள முடியும். கீர்த் தனத்தில் ராகதாளங்களே இசைத்திருக்கிற மாதிரியிலேயே அர்த்தம் தொனிக்க வேண்டும். அதைத்தான் ரஸ்ச் சேர்க்கை என்று சொல்லுகிருேம். இதிலே தியாகையர் மிகவும் சிறப்புக்கொண்டவர். திருஷ்டாந்தமாக, சக்கணி ராஜமார்க்கமு' என்ற கீர்த்தனத்தை எடுத்துக் கொள்ளுவோம். அதிக லங்கதி களும், பின்னல்களும் இல்லாமல் இதன் பல்லவியை சுத்த மாகப் பாடிப் பாருங்கள். "நல்ல ராஜமார்க்கம் இருக்கும் போது சந்துகளில் ஏன் சுற்றுகிருய், மனதே? என்று அர்த்தம் அந்த இசையிலே அகப்படும். "மாருபல்க குன்னவேமி (ஏன் மறுமொழி சொல்லாமல் இருக்கிருய்?) என்ற கீர்த்தனத்தின் பல்லவியைப் பாடிப் பாருங்கள். அந்த அர்த்தம் இசையிலே தொனிக்கும். 2-سسه rلسه