பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிறப்புரை ஜஸ்டிஸ் உயர்திரு எஸ். மகராஜன் 'பாரதியும் பாட்டும் என்ற இந்தத் தொகுப்பு நூல் நல்ல நேரத்தில் வெளிவருகிறது. தமிழ் மொழியோடு, சமஸ்க் கிருதம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், ஃப்ரெஞ்சு முதலிய பல அரிய மொழிகளே ஆசையோடும் ஆர்வத்தோடும் கற்ற கவி சுப்பிரமணிய பாரதியார், மொழி வெறியின்றி எதையும் நடுவு நிலையில் இருந்து நிதானிக்கும் திறமையும் மாசறு காட்சி யும் பெற்றவர் அவர். இப்பேர்ப்பட்ட மேதையின் இசை பற்றிய தீர்ப்புகளை இந்நூலில் திரட்டித் தந்த தொகுப்பாசிரி யர் பெரியசாமித் துரன் அவர்களுக்குத் தமிழுலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது. பாரதியார் தூரதிருஷ்டியோடு கண்ட காட்சிகள் நம் முடைய ஊனக் கண்களுக்கு இப்போதுதான் தெரிகின்றன. "தாயின் மணிக்கொடி tyrfð.** என்று பாடினர். அவர் காட்சியில் தோன்றிய தாயின் மணிக் கொடியை அவர் மறைந்து கால் நூற்ருண்டு கழித்துத்தான் நம் ஸ்தூலக் கண்களால் பார்க்க முடிந்தது. அதைப் போலவே அரை நூற்ருண்டுக்கு முன்னுல் அவர் சொன்ன ஜோஸ்யம் இப்போது பலித்து வருகிறது. என்ன சொன்னர்? 'தமிழ்ச் சபையிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுகளை மீட்டும் மீட்டும் சொல்லுதல் கியாயம் இல்லை. அதனுல் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்" என்று சொன்னர். நம் கண் முன்னல் நமது ஜாதி ஸங்கீத ஞானத்தை இப்போது இழந்து கொண்டி ருப்பதைப் பார்க்கிருேம். தமிழ் நாட்டிலுள்ள இளம் தலைமுறையினர் மெல்லிசை என்ற வல்லிசை வெள்ளத்தின் பயங்கரச் சுழிகளிலே அகப்பட்டு அமைதியைக் குலைக்கும் உணர்ச்சிச் குருவளியிலே சுழன்று, கர்நாடக சங்கீதம் என்ற