பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8. கம்ம ஜாதிக் கடுக்குமோ... (புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார் சொல்லுதல்) "ஒய் நந்தனரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? நியாயந் தானே? நீர் சொல்லும்? என்ற வர்ணமெட்டு பல்லவி ஒய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ? செய்வது சரியோ? சொல்லும். கண்ணிகள் 1. முன்னறி யாப் புது வழக்கம்-நீர் மூட்டிவிட்ட திந்தப் பழக்கம்-இப்போது எந்நகரிலு மிது முழக்கம்-மிக இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஒய் திலகரே) 2. சுதந்திரம் என்கிற பேச்சு-எங்கள் தொழும்புக ளெல்லாம் வீணுய்ப் போச்சு-இது மதம்பிடித் ததுபோலாச்சு-எங்கள் மனிதர்க் கெல்லாம்வந்த தேச்சு (ஒய் திலகரே) 3. வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம்-அன்றி வேறெ வர்க்குமது தியாஜ்யம்-சிறு பிள்ளைகளுக்கே உபதேசம்-நீர் பேசிவைத்த தெல்லாம் மோசம். (ஒய் திலகரே)