பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 0 அ. ச. ஞானசம்பந்தன்

கவலைப்படாமல் அவர்கள்- பக்தர்களா அதுவும் சிவ. பக்தர்களா- என்று கேட்ட அளவிலே அதுவும் நின்று விட்டது. எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை வாழ்ந்த கவிஞர்கட்கு அரசியல் பிரச்சினையோ கட்சிப் பிரச்சினையோ பற்றிச் சிந்திக்க வேண்டிய சூழ்நிலையே ஏற்படவில்லை. -

ஆனால், இந்த நூற்றாண்டின் சூழ்நிலையே வேறாக அமைந்து விட்டது. மிகப் பெருஞ் செல்வரி களிலிருந்து பட்டிதொட்டிகளில் வாழும் அன்றாடங் காய்ச்சிகள் வரையில் அரசியல் சூழ்நிலையில் சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. அவர்கள் விரும்பி னாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கில ஆட்சியின் கடைசிப் பகுதியிலிருந்து இன்று வரை சாதாரணக் குடிமகனின் வாழ்விலும் அரசியல் புகுந்து விட்டது. துறவியர் கூடக் காட்டுக்கு ஓடினாலொழிய அரசியலி லிருந்து தப்பி வாழ முடியாது என்ற உண்மை நாம் அறிந்த ஒன்று. இத்தகைய ஒரு சூழ்நிலையில் உணர்ச்சிப் பெருக்குடைய கவிஞன் ஒருவன் அரசியலில் சேராமல் வாழ்ந்தான் என்று கூறினால், அஃது இயலாத காரியமே என்று சொல்லி விடலாம். முழு மூச்சாக அரசியலில் ஈடுபடாமல் கவிமணி தேசிக விநாயகம் போல் ஒரு சிலர் இருந்திருக்கலாம். என்றாலும், சமுதாயச் சூழ்நிலையை எந்தக் கவிஞனும் சந்தித்துத்தான் தீரவேண்டும். சமுதாயமே. அமைதி இழந்து அரசியலில் பங்கு கொள்ளுகின்ற ஒரு நிலை இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்டு விட்டது. எனவே, அரசியலைப் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயத்தை மட்டுமே தொடர்பு கொள்ளுகின்றான். என்று நினைக்கின்ற கவிஞன் கூடச் சமுதாயத்