பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 e அ. ச. ஞானசம்பந்தன்

அரவிந்தருட்ைய தொடர்பால் சக்தி வழிபாட்டில் மனத்தைச் செலுத்தி அதன் பயனாக இறை உணர்வு மிகுந்த கவியரசராய் ஆகிவிட்டாராகலின் அவருடைய பாடல்களும் திசை திரும்பி விட்டன என்று கூறினோம். இதன் எதிராகப் புரட்சிக் கவிஞர் தொடக்கத்திலிருந்து இறுதிவரை சமுதாயச் சீர்திருத்தம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தும் பாடியும் விட்டார். தாம் விரும்பிய சமுதாயச் சீர்திருத்தம் செய்வதற்குத் தடையாக உள்ளன எவை என்ற சிந்தனை புரட்சிக் கவிஞரின் உள்ளத்தில் கால்கொண்டவுடன் நாட்டில் நடைபெறு கின்ற நலிவுக்குக் காரணமாக இருக்கின்ற கசடர்கள், தாம் செய்கின்ற தவற்றிலிருந்து தப்பித்துக் கொள் வதற்குரிய நொண்டிச் சாக்குக் கூறுவோர், இவை யெல்லாம் கடவுள் செயல்; இவையெல்லாம் விதியின் பயன்; இவையெல்லாம் சாத்திரங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன” என்பவர்கள் ஆகியோர் அவர் முன் காட்சியளிக்கின்றனர். --- - - -

இத்தகைய நொண்டிச் சமாதானங்களைக் கண்ட பாரதியார், சாத்திரங்களை ஒரளவு அறிந்தவ ரா.கலின் அவற்றுக்கெல்லாம் அங்கு இடமில்லை என்பதை உணர்ந்து, 'தமிழர்களாகிய நாம்தான் இக் குறைபாடுகட்குக் காரணமே தவிரப் பழமையைச் சொல்லிப் பயனில்லை என்று சொல்லியதுடன் நிறுத்திக் கொண்டார். ஆனால், புரட்சிக் கவிஞர் இந்த நொண்டிச் சமாதானங்களைச் சொன்னவர்கள் பொய்யர்கள், தாம் செய்கின்ற தவறுகளை மறைப் பதற்காக அவற்றைச் சொல்கிறார்கள்' என்பதை விட்டுவிட்டு, அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தவை