பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 115

எங்கெங்குக் காணினும் சக்தியடா- தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா- அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம்- அந்தத் தாயின்கைப் பங்தென ஓடுமடா- ஒரு .. கிங்குலில் ஏழு முகிலினமும்- வந்து கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ?- எனில் மங்கை நகைத்த ஒலியெனலாம்- அவள் மந்த நகையங்கு மின்னுதடா.

காளை ஒருவன் கவிச் சுவையைக்- கரை காண கினைத்த முழுகினைப்பில்- அன்னை தோளசைத்தங்கு கடம்புரிவாள்- அவன் தொல்லறிவாளர் திறம் பெறுவான்- ஒரு வாளைச் சுழற்றும் விசையினிலே- இந்த வைய முழுதும் துண்டு செய்வேன்- என நீள இடையின்றி நீ நினைத்தால்- அம்மை நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

இப்பாடலின் கருத்து ஆழத்தைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், பாரதிதாசன் என்ற இளங் கவிஞரின் அகமனம் எந்த முறையில் பயின்று, பண்பட்டு இருக்கிறது என்பதை ஒருவாறு அறிய முடியும். இளமையில் இப்படிப் பண்பட்ட ஒர் அகமனம் வேறு எக் காரணம் கொண்டும் இதனை எதிர்த்து வேறு முறையில் பாட இயலாது என்பதைக் காட்டுவதற்காகவே ஏற்றப்பாட்'டின் பகுதியையும் "எதிர்பாராத முத்தத்தில் வரும் குமரகுருபரரைப் போற்றிப் பாடிய பகுதியையும் காட்டினோம். எனவே, கவியரசர் தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் தூய்மையானதும், ஆழமானதும், பிறர்