பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 117

என்று நம்புகின்ற மக்களின் அறியாமை எள்ளி நகை யாடப்பெறுகிறது. கவிஞரின் மிக இளமைக் காலத்தி லேயே எழுதப்பெற்ற இந் நூலில் பெண் விடுதலை பேசப்படுகிறது. -

பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ; மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண் இனத்தை; பெண் அடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண் அடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.

இப் பகுதியில் பெண் அடிமை செய்கின்ற தமிழ் நாட்டைக் கண்டு கவிஞர் எந்த அளவு சீற்றம் கொள் கிறார் என்பதை அறிய முடிகிறது.

மேலும், இத்தாலிக்காரனும், அமெரிக்கனும், ஆங்கிலேயனும் நம் நாட்டைப்பற்றி என்ன நினைக் கின்றார்கள் என்பதையும் கவிஞர் குறிக்கிறார். சிறப்பாக ஆங்கிலேயன் பேசுவதாகக் கூறுவது, அற்றை நாளில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் இந்தியர் களைப்பற்றிக் கூறியன யாவை எனக் கூறும்.

சாதிப் பிரிவு. சமயப் பிரிவுகளும்

நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும் மூடப் பழக்க வழக்கங்கள் எல்லாம் முயற்சி செய்தே ஓடச் செய்தால்...

நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்று பேசும் பொழுது இந்நாட்டின் சமுதாயக் குறைகள் 1936ஆம் ஆண்டிலேயே கவிஞனை எங்ங்னம் விழிப்பு அடையச் செய்தன என்பதை அறிய முடிகிறது. இது தவிர இனிய ஓசையும் சிறந்த உவமை நயங்களும் நிறைந்து நிற்பது சஞ்சீவி பர்வதத்தின் சாரல்.’