பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 123

தேள் கொட்டியது போல’ என்று சொல்லுவார்கள். இவ் உவமையில் உள்ள ஒரு சிறு குறை: ஆயிரம் தேளும் கொட்டிய பிறகு ஓடி விடுமேயானால், அதனால் பெறப்போகும் துயரத்திற்கு ஓர் எல்லை யுண்டு. கொட்டியவுடன் தோன்றும் கடுப்புத் தீர்ந்தவுடன் விடுதலை கிடைக்கும். ஆனால், அவை கொட்டிக்கொண்டே இருப்பின் அதன் நிலையே வேறு. இக் குறைபாட்டை அறிந்த கவிஞர் இவ் உவமையை மாற்றி, "ஆயிரம் தேள் மண்டையிலே மாட்டியதுபோல’ என்று பாடுகிறார். மாட்டியது' என்று கூறிவிட்ட காரணத்தால் கொட்டிவிட்டுத் தேள்கள் போகவில்லை; அதே இடத்தில் இருந்து கொண்டு மறுபடியும் மறுபடியும் கொட்டிக் கொண்டே யிருக்கின்றன என்று சிறப்புபடப் பாடிச் செல்கிறார்.

புரட்சிக் கவிஞரின் பிற பகுதியிலே வருகின்ற, பாடல்கள் உண்மையிலேயே பெரும் புரட்சியை அறிவிக்கின்ற பாடல்களாகும். அரசர்களாக இருப்பவர்கள் குடிமக்களை மக்கள் என்று கருதாமல் அல்லறுத்துகின்ற அவலநிலையைக் கவிதைமூலம் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்.

"காதற் குற்றவாளிகள்’ என்ற பகுதியில், கண்ணொடு கண்ணினை நோக்கச் செய்த கிழட்டு வள்ளுவனாரின் ஒவியத்தைப் புரட்சிக் கவிஞரும் புது, மெருகிட்டுக் காட்டுகிறார். -

கண்ணொடு கண்ணினை கோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனு மில. .