பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 e அ. ச. ஞானசம்பந்தன்

கற்றறிந்த பெரியோர் முதல் பட்டிதொட்டிகளில் வாழும் பாமரர் வரை இப்பகுதியைப் படித்தால், தம்மை மறந்து சில நிமிடங்கள் இருக்க நேரிடும். புரட்சிக் கவிஞரின் ஒப்பற்ற பாடல் திறத்திற்கு, இப்பகுதி ஒர் எடுத்துக்காட்டாகும்.

'அச்சம்' என்ற மெய்ப்பாட்டைத் தொல் காப்பியர் பேசுகிறார், மெய்ப்பாட்டியலில். அச்சம்' என்ற இச்சுவ்ைக்குப் பொருள் கூற வந்த பேராசிரியர், 'குழந்தைக்கு நோய் இல்லையாயினும் உளவாங் கொல்' என்று ஏற்படும் அச்ச உணர்ச்சி தாய்மாருக் குரியது. என்று பேசுகிறார். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் தோய்ந்தெழுந்த கவியரசர் பாரதி தாசனார் இக்கருத்தை மனத்தில் கொண்டு குடும்ப விளக்கில் வரும் தாய், தேவையில்லாமலும் பள்ளிக்குச் சென்று இருக்கும் குழந்தை பற்றி அஞ்சுகிறாள் என்ற மனோதத்துவக் கருத்தை இதோ பாடிக் காட்டு கிறார்:

பிள்ளைகள் நினைவு

பள்ளிக்குச் சென்றி ருக்கும் பசங்களில் சிறிய பையன், துள்ளிக் குதித்து மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தானோ, என்(று) உள்ளத்தில் கினைத்தாள்; ஆனால், முத்தவன் உண்டென் றெண்ணித் தள்ளினாள் அச்சந் தன்னை தாழ்வாரம் சென்றாள் கங்கை.

தாய் அன்பின் தனிச் சிறப்பு என்னவென்றால், தன் குழந்தைகட்கோ கணவனுக்கோ தொண்டு