பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 0 அ. ச. ஞானசம்பந்தன்

இருந்தந்தச் சிறிய பிள்ளை இச்சென்று சப்புக் கொட்டி அருந்தியே மகிழ்ந்த ன்தப்போல் . அவள்காதில் ஒசை கேட்கும்.

மேலை நாட்டுத் திறனாய்வாளர்கள், அந் நாட்டில் திருமணங்கள் முறிவுற்று மணநீக்கம் அதிகம் தோன்றுவதற்குக் காரணம், திருமணமான சில நாட்கள் கழித்து ஒருவரைப்பற்றி யொருவர் கவலைப் படாமல் ஒருவருக்கொருவர் இன்பம் தர வேண்டு மென்று நினையாமல், ஏனோ தானோ என்று இருப்பதுதான் மண முறிவுக்குக் காரணம் என்றும், இதனெதிராகக் கணவனும் மனைவியும் எத்துணை ஆண்டுகளாயினும் தங்கள் நடத்தைகளால் ஒருவரை யொருவர் கவரத்தக்க முறையில் புதுக் கோலம் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறார்கள். இவ் அருமைப்பாட்டை இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னரே அறிந்த தமிழன்,

அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு

என்று கூறிப்போனான். எனவே, திருமணமாகிப் பல்லாண்டுகள் கழித்துப் பல குழந்தைகளைப் பெற்ற பின்னரும் குடும்ப விளக்கில் வரும் தலைவனும் தலைவியும் இன்றைக்கு மணம் புரிந்தோர் என்று சொல்லும்படியாக இருந்தார்களாம். இவ் அழகிய காட்சியைக் கவிஞர் இதோ பாடுகிறார்: