பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 e அ. ச. ஞானசம்பந்தன்

தன்னரும் கையி ருப்பாம் அழகெனும் தலைச்ச ரக்கைக் கிள்ளியமைத் திட்ட கிள்ளாய் கிட்டவா சும்மா வா.ே

ஈடுஇணையற்ற இந்தக் கவிதைத் தொகுப்பில் புலமைத் திறத்தை வெளியிடும் உவமைகளும் உருவகங்களும் கவிதைதோறும் தாண்டவமாடும் காட்சியைக் காண முடிகிறது. கடலின் அலைகள் விளிம்பில் "ஓஹோ' என்ற முழக்கத்தோடு குழப்பம் விளைவிக்கின்றனவே தவிர, நடுக் கடலில் அமைதி பொலிகின்ற காட்சியை நாட்டில் ஏற்படும் 'புரட்சிக்கும் அமைதிக்கும் உவமை செய்கின்றார்.

புரட்சிக்கப் பால்.அ மைதி பொலியுமாம், அதுபோல், ஓரக் கரையினில் அலைகள் மோதிக் கலகங்கள் விளைவிக்கும்; ஆனால் அருகுள்ள அலைகட் கப்பால் கடலிடை அமைதி அன்றோ பெருைேர வான்மு கக்கும்; - வான்திறம் பெருநீர் வாங்கும்:

குன்றின் சிகரங்களின் மேல் மின்னல் பாய்வது, எருது களின் மேல் பாயும் வேங்கைக்கு உவமையாகப் பேசப் படுகிறது. ஆற்று ஒட்டத்தில் தண்ணீர் பாய்ந்து பாய்ந்து மணலால் ஆகிய கரையை உள்ளீடற்றுப்