பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 அ. ச. ஞானசம்பந்தன்

அம்மைக்கும் மகனாகத் தோன்றியவர். 11-ஆவது வயதிலேயே எட்டையாபுரம் சமஸ்தானப் புலவர்களால் சோதனை செய்யப் பெற்றுப் ‘பாரதி’ என்ற பட்டம் அளிக்கப் பெற்றவர். திருநெல்வேலி இந்துக் கல்லூரிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று, அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேச பரீட்சையில் தேர்வு பெற்றுக் காசி இந்துப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம், இந்தி ஆகிய இரண்டும் பயின்றார். 1921-ஆம் வருடம் செப்டம்பர் 11-ஆம் தேதியன்று 39 வயது நிரம்பும் முன்னரே இறைவன் திருவடி எய்தினார்.

இந்த 39 ஆண்டுகளுக்குள் நூற்றுக்கணக்கான பாடல்களும், ஞான ரதம், நவ தந்திரக் கதைகள், சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை, வேடிக்கைக் கதைகள் ஆகிய கதைகளும், கலைகள், மாதர், சமூகம் என்பவை பற்றி நூற்றுக் கணக்கான கட்டுரைகளும் எழுதிச் சென்றுள்ளார். முறையாகப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயிலாது போனதே. அவருடைய வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது என்று நினைக்க வேண்டியுள்ளது. பிறப்பிலேயே கவிஞனாகப் பிறந்த ஒருவனுடைய ஆற்றலைச் சாதாரண மக்களுக்குரிய நடைமுறைகளைக் கொண்டுள்ள பள்ளிக் கல்வி, வளர்ப்பதற்குப் பதிலாக அமுக்கவே பயன்படுகிறது என்று இன்றைய மனோ தத்துவவாதிகள் நன்கு உணர்ந்துள்ளனர். ஆகவே, பாரதியின் பள்ளிப் படிப்புத் தடைப்பட்டது ஒரு பெரிய நன்மைக்கே ஆகும் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

சிறந்த கலைஞனாகப் பாரதி தோன்றிய நிலையில் பொதுவாக இந்தியாவின் நிலையையும்,