பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 அ. ச. ஞானசம்பந்தன்

அறியத் தொடங்குகிறார். “எண்ணிய எண்ணி யாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்” என்ற குறளை நன்கு அறிந்த பாரதி நம்மிடையே உள்ள குறைகளை நினைந்து வருந்துவதுடன் எள்ளி நகையாடு முகமாகக் ‘கிளிக் கண்ணி’யில் கீழ்வருமாறு பாடுகிறார்:

நெஞ்சி லுரமு மின்றி
நேர்மைத் திறமு மின்றி
வஞ்சனை சொல்வாரடீ -- கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடீ.
கூட்டத்திற் கூடி நின்று
கூவிப் பிதற்ற லன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
நாளில் மறப்பாரடீ
ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர்கணமும்- கிளியே
வாழத் தகுதியுண்டோ?
மானம் சிறிதென் றெண்ணி
வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தன்னில்-- கிளியே
இருக்க நிலைமையுண்டோ?
பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை- கிளியே
பாமர ரேதறிவார்?