பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 59.

முதலிறுதி யிடைநமது வசத்தி லில்லை; மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய். பின்னையொரு கவலையுமிங் கில்லை நாளும் பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்.

ஒவ்வோர் இடத்தில் மனம் எனும் பெண்ணே 'வாழி நீ கேளாய்' என்றும், ஒவ்வோரிடத்தில் ‘பேயாய் உழலும் சிறு மனமே" என்றும் பாடுகின்ற. கவிஞரின் நிலையை நாம் அறிய முடிகின்றது.

இங்ங்னம் ஓயாமல் மனத்தோடு போராடிய கவிஞர், மனத்தை அடக்க வேண்டுமென்றால் கூட இறைவனுடைய திருவருளை நாடுவது தவிர வேறு. வழியில்லை என்ற பேருண்மையைக் காண்கின்றார். மாணிக்கவாசகப் பெருமான், 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று கூறியது கவிஞருடைய நினைவுக்கு வருகின்றது போலும். எனவே, மனத்தை ஒயாது அன்பு முறையாலும் சினக்கும் முறையாலும், கெஞ்சுவதைவிட இறைவனைச் சரண் அடைவதே சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்து வேள்விப் பாட்டு' என்ற பகுதியில் இறைவனே! உடல், பொருள், ஆவி என்ற மூன்றையும் உன் முன்னர் இட்டு அஞ்சலி செய்து நிற்கின்றோம்; எங்களைக் காப்பது உனது. கடன்' என்று இதோ பேசுகிறார்:

எம்முயி ராசைகளும்- எங்கள்

இசைகளுஞ் செயல்களுக் துணிவுகளும்

செம்மை யுற்றிட வருள்வாய்- கின்றன்

சேவடி யடைக்கலம் புகுந்துவிட்டோம்