பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நல்ல சிந்தனை வந்து அறிவில் இருந்துகொள்ளும். உன்னைத் தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான் தானகவே ஒடிப் போய் வி டு ம். தெய்வ பக்தியுள்ளவர்களாயினும், நாஸ்திகர்களாயினும், எந்த மார்க்கஸ்தர்களாயிருந் தாலும், அவர்களுக்குத் தியானம் அவசியம். பாரத தேசத்தில் ஒவ்வொருவனுக்கும் தற்காலத்தில் நல்ல தியானம் உணவைக் காட்டிலும் இன்றியமையாதது. சோற்றை விட்டாலும் விடு. ஒரு தனியிடத்தே போயிருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக்கூடிய சிந்தனைகள், பலம் தரக்கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள், இவற்ருல் அறிவை நிரப்பிக் கொண்டு தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவற விடாதே. தெய்வ பக்தியுடையவர்கள் இஷ்ட தெய்வத்தை அறிவில் நிறுத்தி அதனிடம் மிகுந்த தாகத் துடனும் உண்மையுடனும் மேற்கூறியவாறு பெருமைகள் உண்டாகுமாறு ப்ரார்த்தனை செய்யவேண்டும். வாயில்ை பழங்கதையொன்றை முணுமுணுப்பது அதிகப் பயன்தர மாட்டாது. உன்னுடைய உள்ளுயிரிலிருந்து அந்தப் பிரார்த்தனை வெளியேற வேண்டும். நீயாக உனது சொந்தக் கருத்துடன் சொந்த வசனங்களில் உயிர் கலந்து தியானம் செய்வதே பயன்படும். நாஸ்திகர்கூட, இஷ்ட தெய்வமில்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று. 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்பது குறள் பரிபூர்ண விருப்பத்துடன் தியானம் செய். சோர்வும். அதைரியமும் விளைவிக்கத் தக்க எண்ணங்களுக்கு இடங் கொடாதே. ஊற்றிலிருந்து நீர் பெருகுவதுபோல உனக் குள்ளிருந்து தெளிந்த அறிவும், தீரத் தன்மையும், சக்தி யும் மேன்மேலும் பொங்கி வரும். உனது இஷ்ட சித்தி களெல்லாம் நிறைவேறும். இது சத்தியம். அனுபவத்திலே բյո՞ff.