பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதமும் பாரதியும் மகாகவி பாரதி பாரத தேசத்தைப்பற்றி எவ்வாறெல் லாம் சிந்தித்திருக்கிருன் என்பதை எடுத்துக்காட்ட எழுந்த நூலே பாரதியும் பாரத தேசமும் என்ற நூல். பாரதத்தின் சிறப்புக்களை மட்டும் பாரதி மார்தட்டிச் சொல்லவில்லை. அதன் குறைகளையும் மக்களின் சோம்பரையும் துயரங்களையும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிருன். மக்களுக் காகவும் இந்தத் தேசத்துக்காகவும் எவ்வளவு கவலைப்பட்டுக் கவிதைகளை யாத்திருக்கிருன் கருத்துக்களைத் தெரிவித்திருக் கிருன் என்பதை இந்நூலைப் படித்தால் தெள்ளத் தெளியத் தெரிந்துகொள்ளலாம். அவன் கவலைப்படுவதோடு நின்றுவிட வில்லை; எப்படியெல்லாம் பாரதம் மற்ற தேசங்களோடு போட்டியிட்டுச் சிறந்தோங்கி விளங்கவேண்டும்; மக்கள் முன்னேற வேண்டுமென்ற தன் கனவுகளை-அபிலாஷைகளைஅறிவுரைகளை எ ல் லா ம் அள்ளி வழங்கியுள்ளான். அவற்றையெல்லாம் ஒன்றுவிடாது ஒன்று திரட்டி நமக்குத் தருகிருர் தமிழறிஞர் பெ. தூரன் அவர்கள். பாரதியின் மணி மொழிகளை மட்டும் அள்ளி வழங்காது அவற்றுக்குத் தெளிவான திறய்ைவாக விரிவான முன்னுரையையும் தொகுப்பாசிரியர் திரு. தூரன் அவர்கள் இந்நூல் வாயிலாகத் தருகிருர்கள். இந்நூலுக்குப் பாரத தேசத்தின் முன்னுள் நிதியமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம், M.P. அவர்கள் அணிந்துரை அளித்துள்ளார்கள். தொகுப்பாசிரியர் திரு. தூரன் அவர்களுக்கும். அணிந் துரை அளித்த திரு. சுப்பிரமணியம், M.P. அவர்களுக்கும், இந்நூலை வரவேற்கும் வாசகர்களுக்கும் நன்றி. ஏ. திருநாவுக்கரசு வானதி பதிப்பகம்