பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபிள்ளைத்தனமான முயற்சி என்று ஒட்டுமொத்தமா * உதறித் தள்ளினார்கள் ; அதனைப் படித்துப் பார்க்கவே தேவையில்லை எனச் சொன்னவர்களும் உண்டு. ஆனால் ஷெல்லியின் வரலாற்றாசிரியரான எட்மண்ட் பிளண்டன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: இத்தகைய சிந்தனைக் கனிகளை உலகுக்கு வழங்கும் பதினெட்டு அல்லது இருபது வயதுப் பையனை நோக்கி நாம் புன்னகை புரியலாம்: ஆனால், அவை அற்புதமான பையன்களின் மத்தியிலும் அவனை நிச்சயமாகத் தனித்து நிற்கச் செய்கின்றன. அவற்றை வழங்குவதற்கு அவன் அஞ்ச நேரவில்லை {Shelley-E. Blarnden). எனவே அந்த அற்புதமான டைசயனின் புரட்சித் தன்மையின் சாராம்சத்தை உணர்ந்தவர்களும் அங்கீகரித்தவர்களும் அந்நூலை வரவேற்கவே செய்தார்கள். உதாரணமாக, சிறந்த முற்போக்கு வாதியும், பேரறிஞரு மான பெர்னாட்ஷா 1888-ம் ஆண்டில் , 'ஷெல்வி ஸொஸைட்டி' என்ற ஸ்தாபனத்தில் பேசும்போது ராணி மாபை ஒரு பெரிய விஷயத்தைப் பற்றிய, முற்றிலும் சுயமான கவிதை என்று பாராட்டியுள்ளார். அந்நூலின் இலக்கியத்தரம் பற்றிய சர்ச்சை' எவ்வாறிருந்தபோதிலும், ஷெல்லியின் அடிப்படையான தத்துவ தரிசனம் அதில்தான் இடம் பெற்றிருந்தது; பிற்காலத்தில் அவனது கருத்துக்கள் மேலும் மெருகேறிப் பண்பட்டு வந்தபோதிலும், 'ராணி மாபி' ல் அவன் தனது தரிசனமாகக் கொண்ட அடிப்படைத் தத்துவ நோக்கிலிருந்து அவை மாறுபடவில்லை. அதாவது மன்னராட்சி, மத குருக்களின் ஆட்சி ஆகியவற்றை எதிர்ப்பது, மனித குலத்தைப் புல்வேறு அடிமைத்தனங்களி லிருந்தும் விடுவிப்பது, மனிதகுலம் தன் சிறுமையைப் போக்கி, பரிபூரணத்துவ நிலையை எய்தி, பொற்கால சமூக லட்சியத்தை அடைவது முதலிய பற்பல கருத்துக்களும் அவனிடம் என்றும் நிலைத்திருந்தன: இறுதிக்காலம் வரையிலும் அவனது படைப்புக்கள் பலவற்றிலும் அவை பல்வேறு ரூடங்களில் இடம் பெற்றன ; எதிரொலித்தன. . ஷெல்லி தனது 'ரா ணிே மா பின் தலைப்பில் சில பொன். மொழிகளைக் குறித்திருந்தான். அவற்றில்,.**எ னக்கு ,