பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாராம்சத்தை வழங்கும் அர்த்த பாவத்திலும் பயன்படுத்திக் கொண்டு விட்டான், பாரதி இந்திய நாட்டு வேதாந்தத் தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவன்தான். என்றாலும், அதில் இடம் பெற்றுள்ள

  • பிரம்மம் ஒன்றே உண்மையானது, மற்றவை மாயைத் தோற்

றமே!' எனக்கூறும் மாயாவாதத்தை, அதாவது உலக வாழ்க்கையை உறுதிப் பொருளெனக் கொள்ளாது அதனை மறுக்கும் போக்கை உதறித் தள்ளியவன் அவன். . எனவே தான்" அவன் தனது ஞானரதத்தில், முற்றிய ஞா செத்திலே " எவ்வாறு அபேத நிலை ஏற்படுகிறதோ அதுபோல, பரிபூர்ண மான போகத்திலும் அபேத நிலை தோன்றுகிறது. இங்கே- எல் லாருக்கும் எல்லா மாளிகைகளும் உரிமைதான்...போக நிலை நன்றாக உணர்ந்தவர்களுக்கு அத்வைத ஞானம் இயற்கை யிலேயே உண்டாகும். போகமதியாதவர்கள் பேசும் அத் வைதம் பொய், உங்கள் மண்ணுலகத்திலே அந்த ஞான நடிப்பு மிகுதியாக உண்டு” என்று கந்தர்வ லோகத்துப் பர்வத குமாரியைப் பேசவைத்து, உலக வாழ்க்கையை மறுக்கும் வேதாந்தத்தை “ஞான நடிப்பு' என்று ஒதுக்கிவிடுகிறான் , அதே சமயம், அத்வைதம் கூறும் அபேத நிலையை லௌகிக வாழ்விலும், சமத்துவம் என்ற நடைமுறை. அனுபவத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தையும் கூறிவிடுகிறான். எனவே ஏட்டுக் கருத்தாக இருக்கும் வேதாந்தத் தத்து "வத்தை, நாட்டுக் கருத்தாக, நடைமுறை வாழ்க்கையாக மாற்றியமைக்க முனைகின்ற புரட்சிவாதியாகப் பாரதி திகழ் கிறான். சொல்லப்போனால் 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' எனச் சொல்வதுபோல், அத்வைதத் தத்துவத் தைச் சமத்துவ சமுதாயம் என்ற தனது கோட்பாட்டுக்கு ஆட்பட வைக்கும் ' காரியத்தில் அவன் ஈடுபடுகிறான், எனவே தான் இந்த உலகத்தை நித்தியப் பொருளாக, சத்தியப் பொருளாகக் கொண்டு, இங்கு நடைமுறை வாழ்வில் அபேத நிலை கண்டு அதன் மூலம் மனிதர்கள் அமரர்களாக வேண்டும் எனக் கருதுகிறான் அவன். சொல்லப்போனால், எனக்கு இந்த உலகத்தில் ஒரு வேளை உணவு; தரமுடியாத கடவுள் சொர்க்கத்தில் நிரந்தரமான