பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மையை இழந்து கிடக்கும் மனிதன் தன் பலத்தை யுணர்ந்து மேம்பட முடியும் என்றும், மனிதன் அதற்காகவே பிறந்திருக்கிறான் என்றும் நம்பிக்கை கொள்கிறான். அந்த நம்பிக்கையையும் தனது 'ராணி மா’ பின் வாய்மொழியாகப் பின்வருமாறு தெரிவிக்கிறான்: உன து மனோ உறுதியானது கொடுங்கோன்மையையும் பொய்மையையும் எதிர்த்து நிரந்தரமானதொரு போரைத் (தொடுக்கவும், மனித இதயத்திலிருந்து துயரத்தின் வித்தைப் பிடுங்கியெறியவும் தான் விதிக்கப் பெற்றுள்ளது.... நீ நேர்மை வானவன்; நல்லவன் ; இதயத்தை வாடச் செய்யும் வழக்கின் உணர்ச்சியற்ற சுட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட உறுதியான மனம் படைத்தவன்; மகோன்னதமான, புனிதமான, பணி விக்கப்படாத உணர்ச்சியை உடையவன், உலகத்தின் கர்வமும் கீழ்மையும் உன்னை அழித்தொழிக்க முடியாது. , எனவே ஆனந்தம் கொண்டவனே! போ! உனது புன்னகை பிலிருந்து ஒளியையும், வாழ்வையும், பரவசத்தையும் பெறக் காத்திருக்கும் தூங்காத ஆத்மாவுக்கு அந்த இதய ஆனந்தத்தை வழங்கு !....(படலம் 9, வரிகள் 1 89-19 2; 200-203; 209-211): {...tby will Is destined an eterna! war to wage With tyrainy and falselhood, and uproot இhie germs of misery from the kurman heart Thou art sincere and good; of resolute mind Free from heart-withering custoni's cold control, Of passion lofty, pure and unsubdued, Farth's pride 2nd meanness could not vanquish thee... Go, tappy one, and give that bosom joy Whose sleepless spirit waits to catch Light, life and Yapture from thy smile).. ' இவ்வாறு மனிதனின் பெருமையைக் காணும் ஷெல்லி தனது சுதந்திரப் பனுவனில் (Ode to Liberty) மனிதனை 172